சென்னை,ஜூலை 18 பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள், தச்சுத் தொழிலாளி கள், மெக்கானிக்குகள், தொழில்நுட்பாளர்கள், ஓட்டுநர்கள், விற்பனை பிரதிநிதிகள், பியூன்கள் மற்றும் செக்யூரிட்டி கார்டுகள் உள்ளிட்ட முறைசாரா வருமானப் பிரிவினரு க்காக ஸ்வராஜ் வீட்டுக் கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு ள்ளது. ஐஐஎஃப்எல் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வீட்டுக் கடன்கள் வழங்கப்படு கின்றன. முதல் முறையாக கடன் வாங்குபவர்களின் வீட்டுக் கடன் மற்றும் சொத்துகள் மீதான கடன் தேவைகளை இது தீர்த்துவைக்கும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மோனு ரத்ரா ஒரு செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார். சிறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் மற்றும் சொந்தமாக சிறுதொழில் செய்துவரும் தொழி லாளர்கள் இதனால் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.