சென்னை, அக். 7 - இந்திய விமான படை தொடங்கப் பட்டு 92 ஆண்டுகள் முடிவடைந்து 93 ஆவது ஆண்டு தொடங்கி உள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் ஞாயிற்றுக்கிழமை (அக்.6) அன்று விமான சாகச நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம் 1 வரை நடந்தது. இந்த நிகழ்வுக்கு வரு வோர் போதிய அளவில் தண்ணீர், குடை, தொப்பி, உணவு, ஸ்னாக்ஸ் உள்ளிட்டவைகளை கொண்டு வரு மாறு தமிழக அரசு அறிவுறுத்தி யிருந்தது.
இந்நிலையில், இந்த நிகழ்வை காண, எதிர்பார்த்த எண்ணிக்கை யைக் காட்டிலும் கூடுதலாக- சுமார் 15 லட்சம் பேர் வரை குவிந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் வெயில் காரண மாக சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய 5 பேர் உயிரிழந்தனர். 100 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளி யாகி உள்ளது.
இந்நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக 5 பேர் பலியான சம்பவம் குறித்து, அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஞாயிற்றுக்கிழமை சென்னை யில் வெயிலின் தாக்கம் மிக கொடூ ரமாக இருந்தது. இதனால் தான், சாகச நிகழ்ச்சியைக் காண வந்த ஐந்து பேர் மரணமடைந்தனர். இவர்கள் அனைவரும் இறந்த பின்னர் தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள னர். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பின், சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை. 5 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தம் தருகிறது. இதில் அரசியல் செய்ய நினைக்கக்கூடாது.
சாகச நிகழ்ச்சியின்போது வெயி லின் தாக்கத்திற்கு உள்ளான வர்களின் எண்ணிக்கை 102. விமானப் படை கேட்ட அனைத்து உதவி களும் செய்யப்பட்டன. ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
குடிநீர், குடை உள்ளிட்டவற்றை எடுத்து வருமாறு ஏற்கனவே அறி வுறுத்தி இருந்தோம். தேவையான அளவு குடிநீர் வசதி, கழிப்பிடம் உள் ளிட்டவற்றை ஏற்பாடு செய்திருந் தோம். அரசு மருத்துவமனைகளில் 4000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அரசு சார்பில் மருத்துவ முகாம், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் என அனைத்தும் தயார் செய்யப்பட்டிருந்தது. 7500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை யினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டி ருந்தனர். எனவே, குற்றம் கண்டு பிடிக்க வேண்டும் என்பதற்காக அர சியல் பேசுவதை தவிர்க்கவேண்டும்.இவ்வாறு மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
காவல்துறை பதில் அளிக்க
உள்துறை செயலர் உத்தரவு!
இதனிடையே, மெரினா விமான சாகச நிகழ்ச்சி உயிரிழப்புகள் தொடர்பாக தமிழக காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்க உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தர விட்டுள்ளார். அவசர ஆலோச னைக் கூட்டத்தில் விரிவான விளக்கம் கேட்ட நிலையில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
மெரினா வான் சாகச நிகழ்ச்சியின் போது, 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
“இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு தேவையான ஒத்துழைப்பையும், வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தது. இதற்காக தமிழக போலீசார், தீயணைப்புத் துறை, சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட மிக, மிக அதிகளவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், போக்குவரத்தைப் பெறுவதிலும் சிரமம் அடைந்தனர். அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது கூடுதல் கவனத்துடன் ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றும் முதலமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.