தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளரான டில்லி பாபு (50) சென்னையில் காலமானார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி-யின் (Axess Film Factory) நிறுவனர் ஜி.டில்லி பாபு. இவர் 2015ஆம் ஆண்டு உறுமீன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர், மிரள் மற்றும் கள்வன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், இன்று (செப்.9) அதிகாலை காலமானார்.
இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.