tamilnadu

img

நவ. 9, 10 ஆகிய தேதிகளில் விருதுநகரில் கள ஆய்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வரும் நவ. 9, 10 ஆகிய தேதிகளில் விருதுநகரில் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவமருமான முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்; “நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்கினேன். சென்னையில் அண்ணா பெயரில் நூலகமும், மதுரையில் கலைஞர் பெயரில் நூலகமும் அமைந்திருப்பதுபோல, கோவையில் அமையும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் பெரியார் பெயரில் அமையும் என்பதைத் தெரிவித்து, 2026 ஜனவரியில் நூலகமும் அறிவியல் மையமும் திறக்கப்படும் என்பதையும் காலக்கெடுவுடன் அறிவித்தேன். மக்களின் பேரன்பில் கோவை மாவட்டக் கள ஆய்வு மகிழ்வாக அமைந்தது.

அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவோம் என்ற உறுதியை வழங்கி, நவம்பர் 9, 10 தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப் பணியினை மேற்கொள்கிறேன். கோவையில் தொடங்கினேன்!  தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வருவேன்!" என்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.