tamilnadu

img

தரமற்ற மினி கிட் விதைகள் விவசாயிகள் குற்றச்சாட்டு

விழுப்புரம், ஜூலை 19- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயி கள் குறைதீர்ப்பு கூட்டம் ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் மாவட்டத்தில் செயல்படும் வேளாண்மைத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் மெத்தனமாக இருக்கின்றன. வேளாண்மைத்துறையில் மினி கிட் என்ற பெயரில் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் விதைகள் தரமற்ற தாக இருப்பதால் முளைப்புத் திறன்  மற்றும் சாகுபடி குறைந்து விவசாயி கள் பாதிக்கபட்டு வருகின்றனர்.

இந்த கிட் விதைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரண மாக பூச்சி அறித்து முளைப்புத் தன்மையற்றதாக மாறிவிடுவதை ஆராயாமல் வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. வருவாய்த் துறையில் பட்டா மாற்றம், பிறப்பு இறப்பு சான்றிதழ் பெற இடைத்தரகர்கள், லஞ்சம் இல்லாமல் நடைபெறவில்லை.  மின்வாரியம் தற்காலிக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும்  பயனாளி  அதனை மீண்டும் நிரந்தர  மின் இணைப்பாக மாற்ற எஸ்டிமேட் எனக் கூறி பயனாளர்களிடம்  லஞ்சம்  கேட்கும் நிலை நீடிக்கிறது. திரு வக்கரை, குன்னம் உள்ளிட்ட பகுதி களில் செயல்படும் குவாரிகளில் கனிம வளங்கள் சுரண்டப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்  வது இல்லை, சங்கராபரணி ஆற்றில்  தொடர்ந்து மணல் கொள்ளை நடை பெறுகிறது,

திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு பகுதியில் 5க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தண்ணீரை உறிஞ்சி வருகிறது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். மேலும் மாவட்ட அளவில் மாவட்ட அதிகாரிகள் விவசாயி களின் கோரிக்கைகள் மீது நடவ டிக்கை எடுப்பதாகக் கூறினாலும் அதனை செயல்படுத்த வேண்டிய  கீழ்மட்ட அதிகாரிகள் நடவடிக்கை  எடுப்பதில் மெத்தனமாக செயல்படு வதாகவும் குற்றம்சாட்டினார். கரும்பு விவசாயிகள் சங்க  நிர்வாகி ஸ்டாலின்மணி பேசுகை யில், கள்ளக்குறிச்சி பகுதிகளில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் வறட்சி  காரணமாக கரும்புகள் காய்ந்து கருகி  விட்டன. உரிய கணக்கெடுப்பு நடத்தி  இழப்பீடு பெற்றுத்தர மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.  மாவட்ட ஆட்சியர் வறட்சி காரண மாக ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள  ஆலை நிர்வாகத்திடம் பாதிக்கப் பட்ட விவசாயிகள் பட்டியல் பெறப் பட்டு வருகிறது, அதனை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  மேலும் உங்க ளது கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் தெரி வித்தார்.