tamilnadu

img

 பிரபல பாடகர் எஸ்பிபி உடல்நிலை: மருத்துவமனை விளக்கம்

சென்னை:
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி உடல் நிலை சீராக உள்ளது என்றும் மயக்க நிலையிலிருந்து மீண்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.திரையுலகின் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன்  ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். 74 வயதான அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் குறைய 2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவர் வீடியோ வெளியிட்டார்.இந்நிலையில், சில நாட்கள் முன்பு அவருடைய உடல்நிலை மோசம் அடைய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை தரப்படுகிறது. ஆனாலும் உடல்நிலை கவலைக் கிடமானதால் மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

தற்போது எஸ்பிபி உடல்நிலை பற்றி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியான அறிக்கையில், “அவ்வப்போது கண்விழிப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாகவும் மருத்துவர்கள் குழு கூறி உள்ளது”. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.இந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து  விசாரிப்பதற்கும்  கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கே தெரிவதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றார்.அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் சபாநாயகம், எஸ்.பி.பி.யின் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதாகவும் 48 மணி நேரமாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.