நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு, அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கத் தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கடந்த ஜூன் 10ஆம் தேதி குழு அமைக்கப்பட்டது. ஏ.கே.ராஜன் குழுவுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் நான்கு முறை குழு கூடி ஆய்வு செய்துள்ளது. இதுவரை 85,௦௦௦ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வின் தாக்கம் குறித்து தங்களது கருத்துகளை இக்குழுவிடம் தெரிவித்துள்ளனர். 90% பணிகளை ஏ.கே.ராஜன் குழு நிறைவு செய்துள்ளது.
இதனிடையே அவரது குழுவிற்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருப்பதால், அறிக்கை தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இக்குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடியும் நிலையில், கூடுதல் அவகாசம் வழங்கத் தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.