tamilnadu

img

அரசு ஊழியர்  காப்பீட்டுத் திட்டம் நீட்டிப்பு

 

சென்னை, ஜன.8- தமிழகத்தில் அரசு ஓய்வூதியதாரர்க ளுக்கான காப்பீட்டுத் திட்டம் சிறப்பு அம்சங்க ளுடன் 2022 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாகத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் அன்பழ கன், “ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா” எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த துணை முதல மைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அரசு ஓய்வூதிய தாரர்களுக்கு காப்பீட்டுத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.4 லட்சம் வரைக்கும் சிகிச்சை பெறும்  வகையிலும் சிறப்பு அறுவை சிகிச்சை களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் வரை காப்பீடு  பெறும் வகையிலும் புதிய காப்பீடு திட்டத்தில்  மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய தாரர்களின் பெற்றோருக்கும் சிகிச்சை அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்க உள்ளது  என்றார்.