கட்சியிலிருந்து நீக்கம் கட்சியிலிருந்து நீக்கம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்ற பொறுப்புக்கு தகுதியற்ற செயலின் மூலம் கட்சியின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் நடத்தையின் காரணமாக, விருகம்பாக்கம் பகுதிக்குழு உறுப்பினராக இருந்த வி.கார்த்திக், அமைப்புச் சட்டம் பிரிவு-19ன் படி அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். கட்சி உறுப்பினர்கள் அவரோடு எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ரூ.11.5 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்; 5 பேர் கைது சென்னை, டிச. 11 – துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் ரூ. 11.5 கோடி மதிப்புள்ள 9.46 கிலோ சுத்தத் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தைக் கடத்தி வந்த இரண்டு ஆண் பணி யாளர்கள் (ஏர்கோட்சஸ்), தங்கத்தை ஒப்படைத்த ஒரு பயணி, மற்றும் அதனைப் பெற வந்த சென்னையைச் சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். விமானப் பணியாளர்கள் தங்கப் பசையை தங்கள் உடலில் ஒட்டி மறைத்துக் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
வீட்டில் இருந்த வாலிபர் கொலை கடலூர், டிச.11- கடலூர் பாதிரிக்குப்பம் சுந்தரமூர்த்தி நகரில் பிரசாத் (37) என்பவர் தனது தாய் ராமதிலகம் (70) என்பவருடன் வசித்து வந்தார். ஐடிஐ படித்துள்ள இவருக்கு திருமணமாக வில்லை. இந்நிலையில் புதனன்று மாலை வீட்டில் இருந்த பிரசாத் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அக்கம், பக்கத்தில் விசாரணை நடத்தினர். இறந்த பிரசாத் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக பக்கத்து வீட்டு பெண் கவிப்பிரியா திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் நிலையத்தில் சரண் அடைந்தார். கவிப்பிரியாவின் தங்கைக்கு பிரசாத் பாலியல் தொல்லை கொடுத்ததால் கொலை செய்ததாக கூறியதை தொடர்ந்து, கவிப்பிரியா அவருடைய கணவர் முத்துக்குமரன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சித்தாமூர் பிடிஓ அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்
செங்கல்பட்டு, டிச. 11 –
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் (ஊராட்சி ஒன்றியம், கல்வி மையம், விடுதி உட்பட பல அலுவலகங்கள் உள்ளன), மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், மற்றும் மாணவியர் விடுதி மாணவி
கள் பாதிக்கப்பட்டு, கொசுத் தொல்லையால் அவதிப்படு கின்றனர். பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப் படாத நிலையில், தேங்கும் மழைநீரை வெளியேற்ற உடனடியாக மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தூய்மைப் பணியாளரை தாக்கி கொலை மிரட்டல்
சென்னை, டிச.11- சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் இ.உமாவை தாக்கி கொலை மிரட்டல் விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செவ்வாயன்று மேயர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. மண்டலம் 7, வார்டு 84ல் பணிபுரியும் உமா, டிசம்பர் 6 அன்று காலை கையெழுத்திட்டு வெளியே வந்தபோது, எஸ் மேஸ்திரி முன்னிலையில் எல்டியுசி சங்கத்தைச் சார்ந்த ரேணுகா, கோவிந்த மாள், அக்ரவரம் சாந்தி, வனிதா, பிரமிளா ஆகியோர் தரக்குறைவான வார்த்தை களைப் பேசி அடித்து விரட்டினர். என்யுஎல்எம் மேஸ்திரிகள் தங்க ளுக்கு வேண்டியவர்களை வருகை பதிவில் கையெழுத்து வாங்கி வீட்டுக்கு அனுப்பி, மற்றவர்களிடம் கூடுதல் வேலை வாங்கினர். எதிர்த்த பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். வேலை செய்த தொழிலாளர்களுக்கு நாட்களைக் குறைத்துக் காட்டி பணம் கையாண்டனர். அதிகாரிகள் கையூட்டு பெற்று துணைப்போனார்கள். இதுகுறித்து சங்கம் ஆணையர், விஜிலென்ஸ் பிரிவுக்கு கடிதமும் போராட்டமும் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏப்ரல் 28 அன்று பத்திரிகையாளர்கள் இக்கொடுமைகளை வெளிக்கொண்டு வந்ததால் முன்விரோதம் காரணமாக உமா மீது தாக்குதல் நடந்தது. தற்போது மேஸ்திரிகள் வேலைக்குச் செல்பவர்களை அடித்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவர் ஜெ.பட்டாபி, பொதுச்செயலாளர் பி.சீனிவாசலு மனு அளித்தனர்.