இளம்பிள்ளை, ஜன.17- இளம்பிள்ளை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை கே.கே.நகர் பகுதியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் பேரூர் கழகம் சார்பில் சமத்துவ தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பேரூர் செயலாளர் நாகேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கமலகண்ணன், மகேந்திரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் செல்வம், பேரூர் அவைத்தலைவர் தங்கவேல், மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் துரைசாமி, பேரூர் துணை செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி பாஸ்கர், வார்டு செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் தளபதி, சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் அனைவருக்கும் பொங்கல், கரும்பு வழங்கப்பட்டன.