districts

சமத்துவ பொங்கல் விழா

 கும்பகோணம், ஜன.11- தஞ்சை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம்  சார்பில் கும்பகோணம் மேற்கு ஒன்றியம், பம்பப்படை யூர் சமத்துவபுரத்தில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர், பள்ளி வாசல் அஜ்ரத், மாதா கோயில் அருட்தந்தை ஆகியோர்  இணைந்து, பொங்கலிட்டு ஒருவருக்கு ஒருவர் பரி மாறிக் கொண்டனர். கும்பகோணம் மாநகர துணை மேயர் சு.ப.தமிழழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.