விழுப்புரம், ஏப். 25-விழுப்புரம் மாவட்டத்தில் முதன் முதலாக அரசு மாதிரிப் பள்ளிகளில் ஆங்கில வழிக் மழலையர் வகுப்பு (எல்.கே.ஜி) மாணவர் சேர்க்கையுடன் புதன்கிழமை தொடங்கியது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி தொடங்குவதற்கு, கடந்தாண்டு கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது. 32 மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரிப் பள்ளிகளை ஏற்படுத்தி, அதில் 2019-20ஆம் கல்வியாண்டு முதல் வகுப்புகளைத் தொடங்குவதாக அறிவித்தது.அரசு மாதிரிப் பள்ளிகளாக தொடங்கப்படும் பள்ளிகளில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை செயல்படுத்துவதற்கான அடிப்படை கட்டமைப்புகளுக்காக ரூ.50 லட்சம் நிதியும் ஒதுக்கப் பட்டது. இந்தப் பள்ளிகளில் பொலிவுறு வகுப்பறைகள், நவீன ஆய்வுக் கூடம், நூலகம், விளையாட்டு மைதானம், ஆங்கில வழி சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.இந்த வகையில், விழுப்புரம் மாவட்டத் தில், மாதிரிப் பள்ளியாக விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை கல்வித் துறை அறிவித்து, பணிகளை மேற்கொண்டு வருகிறது.இப்பள்ளியில் இந்த ஆண்டு முதல் மழலையர் வகுப்புகள் (எல்கேஜி, யுகேஜி) தொடங்கப்படவுள்ளன. அதற்காக மழலையர் வகுப்புகள் சேர்க்கைக்கான விண்ணப் பங்கள் வழங்கும் பணி புதன்கிழமை தொடங் கியது. நிகழ்ச்சி விழுப்புரம் மகளிர் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி கலந்து கொண்டு ஆங்கில வழிப் கல்விக்கான விண்ணப்ப விநியோகத்தைத் தொடக்கி வைத்தார். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர். முதல் நாளிலேயே 100-க்கும் மேற்பட்ட விண் ணப்பங்களை பெற்றோர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.