tamilnadu

பொறியாளர் வீட்டில் கொள்ளை

ஆவடி, மே 22-ஆவடி வசந்தம் நகரில்யமுனை தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32). சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் பொறியாளராக பணிபுரிகிறார்.கடந்த வாரம் தனது சொந்த ஊரான ஊட்டிக்கு குடும்பத்துடன் சென்று இருந்தார். பின்னர் புதனன்று(மே 22)காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் வெளிப்புற கேட் உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் கதவும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. அவர் அறையில் இருந்த பீரோவை பார்த்தார். அதில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்க பணத்தை காணவில்லை. மர்ம நபர்கள்கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.