சென்னை,ஜூன் 27- தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது. மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 288 இடங்களுக்கு 1,458 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்பில் சேருவதற்கு சிறப்பு பிரிவு மாணவர் களுக்கான கலந்தாய்வு ஜூன் 25 அன்று தொடங்கியது. சென்னை தரமணியிலுள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. அதன் தொடர்ச்சியாக முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கான கலந்தாய்வு நடந்தது. மொத்தம் உள்ள 150 இடங்களுக்கு 958 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஒரு இடத்துக்கு 6 பேர் போட்டியிட்டனர். விண்ணப்பித்தி ருந்த 958 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதால், பெரும்பா லானோர் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் வந்திருந்தனர். ஆனால் பலருக்கும் ஏமாற்றமே கிடைத்தது. பிரிவு அடிப்படை யில் இடம் கிடைவில்லை என்றாலும், இவர்கள் பொது கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். 1:2 என்ற விகிதத்தில் முன்னாள் படைவீரர் வாரிசுகளை அழைக்க திட்டமிட்டிருந்தாலும், விண்ணப்பித்த மற்றவர்கள் எங்களை ஏன் அழைக்க வில்லை? என்று கேட்டுவிடக் கூடாது என்பதால், அனைவரையும் கலந்தாய்வுக்கு அழைத்துள்ள னர். கலந்தாய்வில் 499 பேர் கலந்து கொண்டதில், 121 பேர் கல்லூரியை தேர்வு செய்தனர். விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 500 இடங்க ளுக்கு 1,650 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். அவர்கள் அனை வரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். இதேபோல், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் தொடங்கியது. இந்த பிரிவு மாணவர்களுக்கு மொத்த இடங்களில் 4 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன்28) வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில், 5 ஆயிரத்து 288 இடங்களுக்கு மொத்தம் 1,458 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்த னர். 3 நாட் கள் கலந்தாய்வு நடை பெறுவதால், நாள் ஒன்றுக்கு 500 பேர் வீதம் அழைக்கப்பட்டுள்ளனர். முதல் நாளில் 441 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதில், 436 மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட கல்லூரியை தேர்வு செய்தனர். தொழிற் கல்வி பிரிவினருக்கான 2 வது நாள் கலந்தாய்வில் 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டன.