tamilnadu

பொறியியல் கலந்தாய்வு விவகாரம்: முதல்வருடன் அமைச்சர் சந்திப்பு

சென்னை, ஏப். 20- பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் ஆலோசனை நடத்தினார். பொறியியல் கலந்தாய்வை இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திவந்த நிலையில், இனி தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் கலந் தாய்வை நடத்துகிறது.இந்நிலையில், சென்னையிலுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்ற உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.அப்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பொறியியல் கலந் தாய்வு தேதி, அட்டவணை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மாலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்படும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.