பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, மே 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு மே 7ஆம் தேதி முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது. www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.