ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா
பீகாரில் 243 சட்டமன்ற தொகுதிகளிலும் “இந்தியா” கூட்டணி ஒருமித்து போட்டியிடுகிறது. கூட்டணி சார்பில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை முன்னெடுக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஒன்றாகப் போராடி பாஜக கூட்டணியை தோற்கடிப்போம்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எம்.ஜோசப்
மாநில அரசுகள், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பயனுள்ளதாக அமையும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகம், கூட்டாட்சியை மேலும் வலுப்படுத்தும். மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர்கள் காலதாமதம் செய்தது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
மூத்த வழக்கறிஞர் ஷாருக் ஆலம்
இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக இருக்கும் சம்பவத்தில் மட்டும்தான், இந்திய இஸ்லாமியர்கள் பொது நிகழ்வுகளில் பேச அழைக்கப்படுகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டம் குறித்தோ வக்பு திருத்த சட்டம் குறித்தோ பேசவெல்லாம் அவர்கள் அழைக்கப்படுவதில்லை. இது ஏன்?
மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி
பஹல்காம் தாக்குதல் நடந்த நாளில் காஷ்மீர் மக்கள் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முயன்றனர் ; ரத்ததானம் செய்தனர் ; சிலர் உயிரையே இழந்தனர். இவர்கள் அனைவரையும் ஏன் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கிறார்கள்? ஒன்றிய உள்துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.