states

பாஜக ஆளும் திரிபுராவில் அரசுப் பணி ஆள்சேர்ப்பில் மிகப்பெரும் முறைகேடு 51,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்

பாஜக ஆளும் திரிபுராவில் அரசுப் பணி ஆள்சேர்ப்பில் மிகப்பெரும் முறைகேடு 51,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்

சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி குற்றச்சாட்டு

அகர்தலா வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் பாஜக ஆட்சி நடைபெற்று  வருகிறது. முதலமைச்சராக மாணிக் சாகா உள்ளார். இந்நிலையில், மாணிக் சாகா  தலைமையிலான பாஜக ஆட்சியில்  அரசுப் பணி ஆள்சேர்ப்பில் மிகப்  பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ள தாக எதிர்க்கட்சித் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளருமான ஜிதேந்  திர சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”திரிபுராவில் அரசு பணி ஆள்சேர்ப்பில் மிகப்பெரும் முறைகேடு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த முறைகேடு மற்  றும் அரசின் ஒழுங்கற்ற செயல்பட் டால் மாநிலத்தின் பல்வேறு துறை களில் தற்போது 51,000 க்கும் மேற்  பட்ட பணியிடங்கள் காலியாக உள்  ளன. இதனை நான் கூறவில்லை. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள் விக்கு, அமைச்சர்கள் வழங்கிய தரவுகள் மூலமே ஆதாரம் வெளி யாகியுள்ளது.

“பாலைவனத்தில்  சில துளி தண்ணீர்”

கல்வித்துறையில் மட்டும் 20,000 க்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக இன்னும் 18  முதல் 19 துறைகளின் தரவுகள் நிலு வையில் உள்ளன. இவைகளை கணக்கிட்டால் காலியாக உள்ள  பணியிடங்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிக மாக இருக்கலாம் என எதிர்பார்க் கப்படுகிறது. இத்தகைய காலிப் பணியிடங்களால் பெரும்பாலான முக்கிய துறைகள் கடுமையான மனிதவள பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன.  திரிபுரா பாஜக அரசின் சமீ பத்திய வேலைவாய்ப்பு முயற்சி கள் அனைத்தும் “பாலைவனத்தில் சில துளி தண்ணீர்” போன்றே உள்ளது. திரிபுராவில் அரசு  “குரூப் டி” வேலைகளுக்கு மேற்கு  வங்கத்தைச் சேர்ந்த வெளிமாநி லத்தவர்கள் எவ்வாறு தேர்ந்தெ டுக்கப்பட்டனர்? ஏன் திரிபுராவில் தகுதியானவர்கள் இல்லையா? சமீபத்தில் வீடியோ ஒன்று வைர லானது. அதில் ஒரு பாஜக பஞ்சா யத்து உறுப்பினர் ஒருவர் நேர் காணல் செயல்முறை எதுவும் இல்லாமல் சிறைத் துறை காவலர் வேலையைப் பெற்றுள்ள ஆதாரம் வெளியாகியுள்ளது. இதுபோன்று அரசு பணி ஆள்சேர்ப்பில் மிகப்  பெரும் முறைகேடுகள் நிகழ்ந்து  வருகின்றன. காலிப் பணியிடங் களை நிரப்புவதற்கு விரைவான நட வடிக்கைகள் மற்றும் வெளிப் படைத்தன்மையை திரிபுரா பாஜக அரசு கையாள வேண்டும்” என ஜிதேந்திர சவுத்ரி கோரிக்கை விடுத் தார்.