பிரதமர் மோடி - பாதுகாப்புத்துறைச் செயலர் சந்திப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்கு தலுக்குப் பின் இந்தியா - பாகிஸ் தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனி டையே சனிக்கிழமை அன்று பிரதமர் மோடி கடற்படையின் தலைமை அட்மி ரல் தினேஷ் கே.திரிபாதி சந்தித்து ஆலோ சனை மேற்கொண்டார். தொடர்ந்து ஞாயி றன்று பிரதமர் மோடியுடன் விமானப்படை தளபதி அமர்பிரீத் சிங் சந்திப்பு மேற் கொண்டார்.
இந்த 2 சந்திப்புகளும் தில்லி யில் நடைபெற்றன. இந்நிலையில்,தொடர்ந்து திங்க ளன்று பிரதமர் மோடியுடன் பாது காப்புத்துறைச் செயலர் ராஜேஷ்குமார் சிங் தில்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியா - பாகிஸ் தான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என செய்திகள் வெளி யாகியுள்ளது.