tamilnadu

img

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 4 - பொதுசுகாதாரம், மருத்துவம், உள்ளாட்சி களில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்ப வலி யுறுத்தி வியாழனன்று (ஜூன்4) அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மத்திய மாநில அரசு கள், தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தக் கூடாது,  பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தக் கூடாது, பொதுத்துறைகளை விற்கக்கூடாது, மத்திய அரசு அறிவித்துள்ள பொரு ளாதார தொகுப்பு ஏழை களுக்கு பயன்படும் வகை யில் மாற்றி அமைக்க வேண்டும், ஊழியர் விரோத  நடவடிக்கைகளை கைவிட வேண்டும், மத்திய மாநில அரசு  ஊழியர்களின் ஊதிய வெட்டு, சரண்விடுப்பு ரத்து,  அகவிலைப்படி ரத்து போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் ஓய்வு பெறும் வயதை உயர்த்தக் கூடாது, அரசு பணிகளில் பல்வேறு பெயர்களில் உள்ள ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம்  வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட 10 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

வடசென்னை, தென்  சென்னை மாவட்டங்கள் சார்பில் எழிலகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் டேனியல் ஜெயசிங் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநிலத் தலை வர் மு.அன்பரசு, மாவட்டச்  செயலாளர்கள் இரா.வினோத்  குமார் (தென்சென்னை), அந்தோணிசாமி (வட சென்னை) உள்ளிட்டோர் பேசினர். செங்கல்பட்டு மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் முகமதுஉசேன் தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் தாமோதரன் உள் ளிட்டோர் பேசினர்.