tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜூன் 3- புதுச்சேரி முத்தியால்பேட், பாகூர் ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தால் அப்பகுதியில் நிலத்தடிநீர் வளமும், விவசாயமும் கடுமையாக பாதிக்கபடுவதால் மக்களின் வாழ்வாதரம் கேள்விக் குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அத்திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரி புதுச்சேரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக்குழு செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்புக்குழுவின் நிர்வாகியும், சிபிஎம் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஜி. ரமேஷ்பாபு உரையாற்றினார்.சிபிஎம் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச் செல்வன், பிரபுராஜ், பிரதேசக்குழு உறுப்பினர் சரவணன், அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் பாலமோகனன் ஆகியோரும் உரையாற்றினர். இம் மாதம் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் புதுச்சேரி முழுவதும் நடைபெறும் பிரச்சாரத்தில் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடப்பட்டது.