tamilnadu

மின் ஊழியர் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு... இன்று ஆர்ப்பாட்டம்....

சென்னை:
இன்றைய வேலைநிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டு, அனைத்து வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு முடிவு செய்துள்ளது.

மின்சார சட்டத் திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதைக் கண்டித்து ஆகஸ்ட் 10 அன்று இந்திய நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்வது என தேசிய மின்சார தொழிலாளர்கள் மற்றும் பொறி யாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்தது.அதனடிப்படையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 10 வேலை நிறுத்தம் செய்ய பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.  இந்தியா முழுவதும் மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்களின் வேலைநிறுத்த தயாரிப்பு பணிகளை கண்ட ஒன்றிய  அரசு, விவசாயிகள் போராடிவரும் சூழலிலும் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வில்லை என தெரியவருகிறது.

எனவே ஆகஸ்ட் 9 அன்று கூடிய NCCOEEE கூட்டத்தில்  இன்று (ஆகஸ்ட் 10)  நடைபெற உள்ளஅகில இந்திய வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதுஎன்றும், எந்த நாளில் தாக்கல் செய்யப்படுகிறதோ அந்த நாளில் வேலைநிறுத்தம் செய்வது என்றும், மின்துறைறை பாதுகாப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து மாலை நேர ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று  முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே இந்த முடிவை தமிழகத்தில்  நிறைவேற்றிட தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு திங்கள்கிழமையன்று சிஐடியு அலுவலகத்தில் கூடியது இதில், ஆகஸ்ட் 10 வேலைநிறுத்தத்தை ஒத்தி வைப்பது என்றும்  அனைத்து வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.