குருவி மலை அரசுப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
திருவண்ணாமலை ,ஜுலை16- திருவண்ணாமலை மாவட்டம்,போளூர் ஒன்றியம் குருவி மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை ஆஞ்சலா தலைமை தாங்கினர். போளூர் வட்டார கல்வி அலுவலர்சிவகுமார்,வட்டார வள மைய மேற்பார்வையாளர் இரா.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினர். மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கவிதை போட்டி, பாடல் போட்டி, ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, மாறு வேடப் போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடு களை பட்டதாரி ஆசிரியர் டேவிட் ராஜன் செய்திருந்தார்.