tamilnadu

img

எல்ஐசி பங்குவிற்பனையை கைவிடுக காப்பீட்டுக் கழக கோட்ட மாநாட்டில் தீர்மானம்

சென்னை, ஆக. 12- புதிய கல்விக் கொள்கையை முழுமையாக கைவிடவேண்டும் என காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. காப்பீட்டுக் கழக ஊழி யர் சங்கம் சென்னைக் கோட்டம் 2-ன் 26 ஆவது மாநாடு தண்டை யார்பேட்டையில் ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளில் . இ.எம்.ஜோசப், எம்.தன்ராஜ் அரங்கில் நடைபெற்றது. தலைவர் கு.மனோகரன் தலைமை தாங்கினார். திரு வொற்றியூர் கிளைச் செயலா ளர் எம்.கே.நந்தகோபாலு வரவேற்றார். தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் நந்தலாலா துவக்கவுரை யாற்றினார். தென்மண்டலப் பொதுச் செயலாளர் த.செந்தில்குமார் சிறப்புரை யாற்றினார். ஐசிஇயு கோட்டம் 1-ன் செயலாளர் ஜெயராமன் வாழ்த்துரை வழங்கினார். பொதுச் செயலாளர் மா.தனசெல்வம் அறிக்கையை சமர்பித்தார்.  ‘இன்றைய தொழிற்சூழ லும் - போராட்ட வடிவமும்’ என்ற தலைப்பில் காஞ்சி புரம் சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்கு மாரும், ‘புதிய கல்வி க்கொள்கை வரமா - சாபமா’ என்ற தலைப்பில் ஐஐடி பேரா.கல்பனா கருணாகர னும் கருத்துரையாற்றினர். தென்மண்டல துணைத் தலைவர்கள் க.சுவாமி நாதன், ஆர்.தர்மலிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கோட்ட மூத்த மேலாளர் எம்.கே.கரு ப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். கோட்டம் 2-ன் இணைச் செயலாளர் என்.நாகநாதன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
பொதுத்துறையிலேயே எல்ஐசி நீடிக்க வேண்டும், எல்ஐசி - யின் பங்குகளை விற்பனைச் செய்யும் முயற்சியை கைவிட வேண்டும், இன்சூரன்ஸ் துறையில் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் முயற்சியினை கைவிடவேண்டும், எல்ஐசி நிர்வாகம் 1 . 8. 17 முதல் நிலுவையிலுள்ள ஊதிய உயர்வு கோரிக்கை சாசனத்தை விரைந்து முடிக்க வேண்டும், பெரும்பான்மை ஊழியர்க ளின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்று, எல்ஐசி - யையும், ஊழியர்க ளின் நலன்களையும் பாது காத்து வரும் ஏஐஐஇஏ - விற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். சாதி ஆணவக் கொலை களை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்றிடவேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், தலித் - சிறுபான்மையின மக்கள் மீது இந்துத்துவ மதவெறி அமைப்புகள் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
கோட்டம் 2-ன் தலைவ ராக கு.மனோகரன், செயலா ளராக எம்.தனசெல்வம், பொருளாளராக ஆர்.சிந்துஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.