tamilnadu

37 இடங்களில் திமுக அணி சாதனை வெற்றி: பேரவையில் காரசார விவாதம்

 சென்னை, ஜூலை 13- மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் வெற்றி குறித்து சட்டப்பேர வையில் திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. கைத்தறித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தை துவக்கி  வைத்து பேசிய திமுக உறுப்பினர் க.சுந்தர்,“ மக்களவைத் தேர்தலில்  1.25 கோடி வாக்குகளை அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி  பெற்றது. 2 கோடிக்கு அதிகமான வாக்குகளை பெற்ற திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 37 இடங்களை கைப்பற்றி மீண்டும் சாதனையை படைத்தது” என்றார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த திமுக மீண்டும் வெற்றி பெறும் போது, நாங்கள் வெற்றி பெற மாட்டோமா? என்றும் உண்  மைக்குப் புறம்பான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றீர்  கள்” என்றார். தொடர்ந்து பேசிய சுந்தர்,“நாங்கள் ஆர்.கே.நகரில் வைப்புத் தொகையை இழந்தாலும், இப்போது 2 கோடி வாக்குகள் பெற்றுள்ளோம். எங்கள் கட்சித் தலைவர் கருணாநிதி போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றிபெற்றார். ஆனால், உங்கள் கட்சித் தலைவர் பர்கூரில் தோல்வியை தழுவியவர், உங்கள் கட்சி பென்னா கரத்தில் டெபாசிட் தொகை இழந்தது” என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் டி.ஜெயக்குமார், “தமிழகத்தில்  அதிக தோல்வி அடைந்த கட்சி அதிமுகதான். இந்த மக்களவைத் தேர்த லில் உண்மைக்கு மாறான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி  பெற்றீர்கள். திமுக கொடுத்த வாக்குறுதிகளை அமெரிக்காவாலேயே நிறைவேற்ற முடியாது. இந்தியா முழுவதற்கும் போடப்படும் நிதிநிலை  அறிக்கையின் ஒட்டுமொத்த நிதியை ஒதுக்கினாலும், திமுக கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. அதிமுக வுக்கு ஏற்பட்டுள்ளது தற்காலிகப் பின்னடைவுதான். ஆனால், மக்கள வைத் தேர்தலில் வெற்றி பெற்றும் முழுமையான மகிழ்ச்சியைப் பெற  முடியாமல் திமுக இருக்கிறது. ஆப்பரேசன் சக்சஸ் பேஷன்ட் அவுட்’  என்பதை போல் உங்களுக்குத் தேர்தல் முடிவு கிடைத்துள்ளது” என்றார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.