சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு திமுக பொதுக்குழுவில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வில் சமூக அநீதி களைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தி மொழியை திணிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது; இந்தி மொழி திணிப்புக்குகண்டனம் தெரிவிக்கப்பட்டது.சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும், அருந்ததியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு உரிய இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.திமுக பொதுச் செயலாளருக்கான அதிகாரத்தை மீண்டும் பொதுச்செயலாளரிடமே ஒப்படைக்கும் சட்டத் திருத்தம் இந்தக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது.