tamilnadu

img

மழைநீர் கால்வாயில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

அம்பத்தூர், ஏப். 23-அம்பத்தூர் மருத்துவமனை சாலையில் உள்ள திறந்த நிலை கால்வாயில் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதால் நீரோட்டம் தடைபட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.அம்பத்தூர் சிடிஎச் சாலை (சென்னை, திருவள்ளூர்நெடுஞ்சாலை), கிருஷ்ணாபுரம், சோழபுரம் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையோர கால்வாய் மூலம் அகற்றப்படுகிறது. இதனை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஆவடி நகராட்சி நிர்வாகம் இணைந்து பராமரிக்க வேண்டும். ஆனால்முறையாக பராமரிப்பதில்லை. இதனால் அடிக்கடிகால்வாயில் அடைப்புஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி சிடிஎச் சாலையில் வழிந்தோடுகிறது. குறிப்பாக, அம்பத்தூர் மருத்துவமனை சாலையோரம் உள்ள கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், அதில் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால், நீரோட்டம் தடைபடுவதுடன், கடும் துர்நாற்றம்வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தி அதிகரித்து சுற்றுப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-அம்பத்தூர் நகராட்சியாக இருந்த போது மழைநீர் செல்ல தற்காலிமாக இந்தகால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாயில் கடந்த சில ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், வர்த்தக நிறுவனங்களின் கழிவுநீர் விடப்படுகிறது. இதனால் மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. இந்த பகுதி மாநகராட்சியாக மாறிய பிறகு மாநகராட்சி நிர்வாகம் இதனை சரியாக பராமரிக்கவில்லை. இதனால் அடிக்கடி அடைப்புஏற்பட்டு சிறு மழைபெய்தாலும் கழிவுநீர்வெளியேறி சிடிஎச்சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த கால்வாய் அம்பத்தூர் மருத்துவமனை சாலையின் வலதுபுறம் ஆவடி நகராட்சி பகுதியிலும், இடதுபுறம் சென்னை மாநகராட்சிபகுதியிலும் அமைந்துள்ளது. இந்த திறந்தநிலை கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதால், கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதில் கொசு உற்பத்தியாவதால் சுற்றுப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. எனவே இந்த கால்வாயை சீரமைத்து கான்கிரீட் மூடி அமைக்க வேண்டும், முறையாக பராமரிக்க வேண்டும், என அம்பத்தூர் மண்டல அலுவலகத்திலும், ஆவடி நகராட்சி அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அம்பத்தார், கிருஷ்ணாபுரம், சிடிஎச் சாலை, மருத்துவமனை சாலை பகுதியில் உள்ள கால்வாயை சீரமைத்து காண்கிரீட் மூடி அமைக்க மாநராட்சி, ஆவடி நகராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.