பெங்களூரு
பரபரப்பான கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதின.டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து, 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.சென்னை அணி கேப்டன் தோனி (84 ரன்கள் - 7 சிக்ஸர், 5 பவுண்டரி) கடுமையாகப் போராடியும் வெற்றிக் கனியை எட்டமுடியவில்லை. சென்னை அணி தோல்வியடைந்தாலும் தோனி மூன்று சாதனைகள் படைத்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்.
தோனியின் சாதனைகள்
1. ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர்.
2.ஐபிஎல் போட்டியில் கேப்டனாக 4000 ரன்களைக் கடந்த முதல் வீரர்.
3.12-வது சீசனில் தோனி அடித்த ஒரு சிக்ஸர் 111 மீ. தாண்டிச் சென்றது.இந்த வருட ஐபிஎல்-லில் அதிகத் தூரம் சென்ற சிக்ஸர் இதுதான்.