சென்னை
இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா வைரஸை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் மக்கள் வருமானம் இன்றி வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் ரிசர்வ் வங்கி 3 மாத EMI தொகை வசூலிப்பதைத் தள்ளிவைக்குமாறு நிதி நிறுவனங்கள் மற்றும் பிற வங்கிகளுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதன்முதலாக அமல்படுத்தியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு வங்கியாக இந்த உத்தரவை வெளியிட்டு வருகின்றன. ரிசர்வ் வங்கி உத்தரவிட்ட நாள் முதல் இதுவரை 6 வங்கிகள் மட்டுமே ஆக்கப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
அவை
1. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
2. பஞ்சாப் நேஷனல் வங்கி
3. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்
4. கனரா வங்கி
5. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
6. பேங்க் ஆப் பரோடா
ஹெஜ்.டி.எப்.சி போன்ற தனியார் வங்கிகள் இந்த மாத தவணை தொகையைக் கட்டுமாறு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.