பள்ளி பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் மின் தட்டுப்பாட்டுக் காரணமாகவும் ஆன்லைன் வகுப்பிலும் மாணவர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழக அரசு ஏற்கனவே முடிவு செய்தது போல், ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் பருவத் தேர்வுகள் நடத்தப்படும். அதுவரை எவ்வளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக தெரிந்து கொண்டு, அதன் பின்னர் பொதுத்தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என இவ்வாறு அவர் கூறினார்.