ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தினக்கூலி வழங்க மறுக்கின்றனர். சீருடை, ஓய்வறை, கழிப்பிடம், குடிநீர்உள்ளிட்ட வசதிகள் கூட செய்துதரப்படவில்லை.
வேலைநிறுத்தமாக மாறும்
எனவே, அரசு தொழிற்சங்கங்களை தேர்வு செய்து அழைத்து பேச வேண்டும். கைப்பாவை சங்கங்களை வைத்து துரோக ஒப்பந்தத்தை திணிக்கக் கூடாது. வேலை நிறுத்தம் செய்ய அனைத்து நியாயங்கள் இருந்தாலும், பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி காத்திருப்புபோராட்டம் நடத்துகிறோம். தொழிலாளர்களின் நியாயத்தை உணர்ந்து அரசு அழைத்துப் பேசும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும்; தவறும்பட்சத்தில் காத்திருப்பு போராட்டமே வேலைநிறுத்தமாக மாறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்தப்போராட்டத்தில் அ.சவுந்தரராசன்,ஜி.சுகுமாறன் (சிஐடியு), பாலசுப்பிரமணி யம், பாரூக் (தொமுச), துரை, தயானந்தம்,கனகராஜ் (சிஐடியு), ஆறுமுகம், கஜேந்திரன் (ஏஐடியுசி), சுப்பிரமணியபிள்ளை (எச்எம்எஸ்), நாராயணசாமி (ஐஎன்டியுசி), வெங்கடேசன் (எம்எல்எப்), பத்மநாபன், நாகராஜ் (டிடிஎஸ்எப்), வேலு, ராஜேந்திரன் (ஏஏஎல்எல்எப்), மோகன் (டிடபிள்யுயு) உள்ளிட்டோர் பேசினர்.
மார்ச் 20ல் பேச்சுவார்த்தை
இந்த காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மார்ச் 20 அன்று ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
எந்தெந்த சங்கங்களுடன் பேச்சுவார்த்தை?
இந்த அறிவிப்பு தொடர்பாக அனைத்துதொழிற்சங்க கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் “போராடும் சங்கங்களை அழைத்து பேசாமல் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அரசு தன்னிச்சையாக அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது. பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்பது மட்டும் கூட்டமைப்பின் கோரிக்கையல்ல. யாரோடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
2018ம் ஆண்டு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பந்தமில்லாத நபர்களைவைத்து ஒப்பந்தம் உருவாக்கியதால் 8 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. எனவே, அரசு இந்த முறை பேச்சுவார்த்தை என்ற பெயரில் தொழிலாளர்களை வஞ்சிப்பதை ஏற்க முடியாது. எனவே, கூட்டமைப்பு சங்கங்களை அழைத்துப்பேசி, எந்தெந்த சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதுவரை மாநிலம் முழுவதும் ஜனநாயக ரீதியாக, அமைதியான முறையில் காத்திருப்பு போராட்டம் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.