tamilnadu

img

கடன் அளிப்பதை குறைக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவு முற்றிலும் தவறு; மறுபரிசீலனை செய்திடுக... பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை:
மாவட்டங்களுக்கு  கடன் அளிப்பதை குறைக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவு முற்றிலும் தவறானது என்றும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.தமிழக மாவட்டங்களுக்கு கடன்அளிப்பதை குறைத்துக் கொள்வதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டிருந்தது.இந்நிலையில் தமிழக மாவட்டங்களுக்கான கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் கொள்கை முற்றிலும் தவறானது என்றும் முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றும் பிரதமர்மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்தில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில் சில சரத்துகள் பாரபட்சமாக உள்ளன. மாவட்டங்களுக்கான கடன்விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் கொள்கை முற்றிலும் தவறானது. தமிழக மாவட்டங்களுக்கு கடன் அளிப்பதை குறைக்கும் ரிசர்வ்வங்கியின் முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும்.மேலும் பழைய நடைமுறையையே தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.