சென்னை, மே 21-மாணவர்களின் வசதிக்காக கடந்த 3 ஆண்டுகளின் பொறியியல் கட்-ஆப் விவரங்களை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு, தரவரிசைப் பட்டியல் வெளியீடுக்கு பிறகு கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும்.இந்நிலையில் எவ்வளவு கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற தகவலை மாணவர்களுக்கு தெரியப்படுத்தி, பொறியியல் கல்லூரிகளின் தரம் அறிந்து சேர்க்கையை நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.அதன்படி தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு கடந்த மூன்று ஆண்டுகளின் கட்-ஆப் மதிப்பெண் விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இவற்றை றறற.வநேயடிடேiநே.in என்ற இணையதளத்தில் பெறலாம்.