tamilnadu

img

ஊரடங்கு விதிமீறல்... தமிழகத்தில் 82,000 வழக்குகள்

சென்னை
நாட்டில் 21 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசுகள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்களுக்காகக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரலாம். மற்ற நேரங்களில் வெளியே சுற்றினால் வாகன பறிமுதல் மற்றும் வழக்குப் பதிவு நடவடிக்கை செய்யப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மீறியதாக 82,752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் 90,918 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் சுற்றியவர்களிடம் இருந்து 69,589 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.