tamilnadu

ஊரடங்கு தளர்வு - உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.....

சென்னை:
ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 2)  ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் 5-ந்தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில், 3 வகையான மாவட் டங்களாக பிரித்து வெவ் வேறு வகையான தளர்வுகளை அறிவித்துள்ளார்.முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களும், 2-ம் வகையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட 23 மாவட்டங்களும், 3-ம் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் வருகின்றன.

இந்த நிலையில், வரும் 5 ஆம் தேதி (திங்கட்கிழமை) ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில், அதை மேலும் நீட்டிப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று (ஜூலை 2) ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.பொது போக்குவரத்து இயங்கி வரும் நிலையில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா? மேலும் தளர்வுகளை அறிவிக்கலாமா? என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப் படும் எனத்தெரிகிறது. அதைத் தொடர்ந்து சனிக் கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.