கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் கரிகுப்பம் கிராமத்தில் ஊரடங்கு தடை காலத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் இருளர் இன மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வேல் முருகன், விஜய், லெனின் ஆகியோர் பங்கேற்றனர்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 75 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணி, தலைவர் சுரேந்திரன், பொருளாளர் மனோகரன் உள்ளிட்டோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.