tamilnadu

img

மழைநீரில் கச்சா எண்ணெய்! - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

சென்னை எண்ணூரில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கலந்து வந்தது தொடர்பாக ஆய்வு செய்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்  அறிக்கையை டிசம்பர் 12-ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை எண்ணூரில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கலந்து வந்தது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், சென்னை மண்டலத்தின் நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர், தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குநர், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் அடங்கிய குழு அமைத்து தீர்ப்பாயம் உத்தரவு. எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதிகளில் டிசம்பர் 11 ஆம் தேதி நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும், வீடுகளில் படிந்துள்ள எண்ணெய் கசிவு படலத்தின் மாதிரிகளை சேகரித்து, அதில் கலந்துள்ள ரசாயனம் என்ன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதையும் கண்டறிந்து, டிசம்பர் 12 ஆம் தேதி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என குழுவுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.