tamilnadu

கோட்டை முன்பு சிபிஎம் போராட்டம்...

குடிமக்களாக்கி நமது குடியுரிமையை பறிக்க முனைந்துள்ளது.

அனைத்து மதத்தவருக்கும் பாதிப்பு
இந்த கணக்கெடுப்பின் தொடர்ச்சியாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) தயாரிக்கவும் திட்டமிடுகிறது. இதனால் தமிழகத்திலேயே கோடிக்கணக்கான மக்கள்தங்கள் குடியுரிமையை இழக்க நேரிடும். என்.பி.ஆர்., என்.ஆர்.சி. அமலாக்கம் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து மதங்களையும் சார்ந்த ஏழை, எளிய மக்களையும் பாதிக்கும். இந்திய  மண்ணில் பிறந்தவர்களை இந்தியநாட்டிலேயே - தமிழகத்திலேயே  குடியுரிமையற்றவர்களாக்கி அகதிகளாக்கும் நடவடிக்கையை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. 

கிஞ்சித்தும் கவலை கொள்ளாத அதிமுக அரசு
இந்த பேராபத்தை உணர்ந்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு தொடங்கி 13-க்கும் மேற்பட்ட மாநில அரசுகள் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.யை நிராகரிக்க முடிவு செய்துள்ளன. பாஜக அணியில் உள்ளசில மாநில அரசுகள் கூட என்.பி.ஆர்-ஐநிராகரித்துள்ளன. ஆனால் தமிழகத்தை ஆளும்அஇஅதிமுக அரசு இதைப்பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு துணை நிற்கிறது. இதனால் மக்களுக்கு எந்தபாதிப்பும் இல்லை என போதனையும் செய்கிறது.

தமிழக அரசின் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்.,என்.ஆர்.சி.க்கு ஆதரவான நிலைபாட்டை கண்டித்தும், குடியுரிமையை பறிக்கும் சட்டத்திருத்தத்தையும், கணக்கெடுப்பையும், பதிவேட்டையும் எதிர்த்துப் போராடும் மக்களின்உணர்வை கருத்தில் கொண்டும் மார்ச் 9 தொடங்கி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்.,என்.ஆர்.சி.ஐ ஏற்க மாட்டோம் எனவும், தமிழகத்தில் என்.பி.ஆர்., அமல்படுத்தப்படாது எனவும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2020 மார்ச் 9 அன்று காலை 10 மணியளவில் கோட்டை முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.

இவ்வியக்கத்திற்கு, சி.ஏ.ஏ., என்.பி.ஆர்.,என்.ஆர்.சி.க்கு எதிராகவும் - அரசியலமைப்புச் சட்டம், மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை பேணிபாதுகாக்க குரல்கொடுக்கும் அனைத்துப்பகுதி மக்களும் கலந்து கொண்டு பேராதரவு தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.