சென்னை, ஜூன் 2 - பாலஸ்தீன மக்கள் மற்றும் குழந்தை களை ஈவிரக்கமற்ற முறையில் கொடூர மாக படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசைக் கண்டித்தும் போரை உடனடி யாக நிறுத்தக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜூன் 2 ஞாயிறன்று மாநிலம் முழுவதும் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.
இஸ்ரேல் அரசின் இனப்படு கொலைக்கு துணைபோகும் அமெரிக்கா, அதன் கூட்டாளி நாடுகள் மற்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக வும் நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி கண்டன இயக்கங்களை நடத்தி வரு கிறது. சென்னையில் நடைபெற்ற பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.
சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் சிந்தாதிரிப்பேட்டை பகுதி யில் நடைபெற்ற ஊர்வலம், ஆர்ப்பாட்ட த்திற்கு, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமை வகித் தார். மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பி னர் என்.குணசேகரன், மாவட்டச் செய லாளர்கள் எல்.சுந்தர்ராஜன் (வட சென்னை), ஆர்.வேல்முருகன் (தென் சென்னை), மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஏ.பாக்கியம், எம்.ராம கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
சுதந்திர பாலஸ்தீனம் மலரட்டும்
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ரஃபாவின் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும், போர் நிறுத்தத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும், சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை உரு வாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், சுதந்திர பாலஸ்தீன நாடு மலரட்டும், மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆயு தங்கள் ஏற்றுமதி செய்வதை உடனடி யாக நிறுத்த வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஊர்வலத்தில், பாலஸ்தீன கவிதைகள் வாசிப்பு, காம்ரேட் கேங்ஸ்டா குழுவினரின் பாடல்கள் இடம்பெற்றன. போர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் போன்று வேடமிட்டு வந்த குழந்தைகள், போரின் குரூரத்தை உணர்த்தினர்.