tamilnadu

img

நெல்லையில் வாலிபர் சங்கத் தலைவர் அசோக் படுகொலை கண்டனம் முழங்க சிபிஎம் அழைப்பு

சென்னை, ஜுன் 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே கரையிருப்பு கிராமத்தில் வசிக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழு உறுப்பினருமான தோழர் அசோக் (வயது 24) அந்த கிராமத்தில் உள்ள சாதி ஆதிக்க வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.  கரையிருப்பு கிராமத்தில் உள்ள தலித் மக்கள் தங்களது வேலை மற்றும் அன்றாடப் பணிகளுக்காக வேறு சமூக மக்கள் வசிக்கும் பொதுப்பாதை வழியாகவே செல்ல முடியும். அவ்வழியே செல்லும் தலித் மக்களை, சாதி ஆணவம் கொண்ட சில வெறியர்கள் சாதிய ரீதியாக இழிவுபடுத்தும் செயல்கள் தொடர்ந்து நடந்து வந்துள்ளன. இதனை தட்டிக் கேட்க முன்வருபவர்களை இடைமறித்து இழிவுபடுத்துவது, அச்சுறுத்தி தாக்குவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.  இந்நிலையில் தோழர் அசோக் அவ்வழியே தனது தாயாருடன் இரண்டு வாரங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது சில சாதிவெறி சமூக விரோத சக்திகளால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டும், புகார் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், ஜுன் 12 புதன் இரவு சுமார் 9 மணியளவில் தோழர் அசோக் வேலைக்கு செல்லும் போது, சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

திருநெல்வேலியில் சாதி ஆதிக்க வெறியர்களால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தோழர் அசோக் படுகொலை செய்யப்பட்டதற்கு காவல்துறையின் அலட்சியமே  காரணம் என வாலிபர் சங்க  மாநிலக்குழு குற்றம்சாட்டியுள் ளது. இப்படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனம் முழங்கவும் அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ் குமார், செயலாளர் எஸ்.பாலா  ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளரும், நெல்லை தாலுகாச் செயலாளராகவும் செயல் பட்டு வந்த தோழர் அசோக் சாதி ஆதிக்க வெறியர்களால் 12-06-2019 அன்று இரவு கரையிருப்பு பகுதி யில் படுகொலை செய்யப்பட்டார். இத்தகைய கொடூரச் செயலை, சாதி ஆணவ வெறியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோக் கடந்த பல ஆண்டு களாக நெல்லை தாலுகா பகுதி யில் உள்ள பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக வும், சாதி மோதல்களை தடுத்து மக்கள் ஒற்றுமைக்காகவும் தொடர்ந்து களப்பணியாற்றி வந்தவர்.

காவல்துறை அலட்சியம்
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 27 ம் தேதி வயல்வெளிக்கு சென்று விட்டு தனது தாயாருடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது வழிமறித்து பேச்சிராஜன் உட்பட சிலர் தோழர் அசோக்கை யும் அவரது தாயாரையும் தாக்கி யுள்ளனர். இதுகுறித்து தச்ச நல்லூர் காவல் நிலையத்தில் தோழர் அசோக் புகார் அளித்தார். அதன் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது. அதே நேரத்தில் பாதிக்கப் பட்டவர்கள் மீது எதிர்தரப்பு புகார் அளித்ததையொட்டி இரு தரப்பி னர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்ன வெனில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டிய தோழர் அசோக்கின் புகாரை காவல் துறை அலட்சியப் போக்குடன் கையாண்டதே இத்த கைய படுகொலைக்குக் காரணம் என்பதை சுட்டிக்காட்ட விரும்பு கிறோம். தோழர் அசோக் மக்கள்  ஒற்றுமைக்காகவும் சமூகக் கொடு மைகளுக்கு எதிராகவும் போராடி வருவதை அந்தப் பகுதியைச் சேர்ந்த சாதி ஆதிக்கவாதிகளால் பொறுத்துக் கொள்ள இய லாமல் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக் கிறார். ஒரு மாதத்திற்கு முன்பு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒருவர் புகார் அளித்தால் அவ ருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க  வேண்டும், அந்த புகாரின் மீதான விசாரணையை விரைவில் நடத்திட வேண்டும் என ஏற்கனவே பல வழிகாட்டுதல்கள் இருந்தும் அத்தகைய வழிமுறைகள் எதை யும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை பின்பற்றவில்லை. இதிலிருந்து சாதி ஆதிக்க வெறி யர்களுக்கு மாவட்ட காவல்துறை துணை போயிருக்கிறது என்பது வெட்கக்கேடானதாகும். எனவே தோழர் அசோக்கை படுகொலை செய்த குற்றவாளி களை விரைந்து கைது செய்வது டன் அவர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தரு வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலி யுறுத்துகிறோம்.
 

மண்டலம்
தொடர்ந்து கரையிருப்பு பகுதியில் சாதி ஆதிக்கவாதி களால் தீண்டாமை கொடுமை நிலவி வருவதால் இந்த பகுதி யை வன்கொடுமை பாதிக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய் வதுடன் தீண்டாமை வன்கொடு மையை தடுத்திட மாநில அரசாங் கம் நடவடிக்கை எடுத்திட வேண்டும். இந்த கொலை குறித்து சிபி சிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட தோழர் அசோக்கின் குடும்பத் திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், அவரது குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். தொடர்ந்து கரையிருப்பு பகுதி ஆர்.எஸ்.ஏ நகர் பொது மக்க ளுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பேருந்து நிலையம் செல்வது உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டிற்கு பாதை அமைத்துக் கொடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை பாது காப்பதற்குப் பதிலாக சாதி ஆதிக்க வெறியர்களுக்கு துணைபோகும் தச்சநல்லூர் காவல்துறை அதி காரிகள் மீது கடுமையான நட வடிக்கை எடுத்திட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தை நடத்திட அனைத்துப் பகுதி ஜனநாயக இயக்கங்களையும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் தமிழ் நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
தோழர் அசோக் படு கொலைக்கு கடும் கண்டனம் தெரி வித்துள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர், “வாலிபர் சங்கத்தின் தலைவராக முழு வீரியத்தோடு தனது போரா ட்டப் பங்களிப்பை செலுத்தி வந்த தோழர் அசோக், தலித் மக்கள் குவியலாக வசிக்கக்கூடிய தங் களது பகுதியில் குடிநீர் விநியோ கம், சாக்கடை அடைப்பு, ரேசன் விநியோக முறைகேடுகள் போன்ற பல பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராட்டங்களில் ஈடு பட்டதும், அப்பகுதியில் அம்பேத் கர் விழாக்களை சிறப்புடன் ஏற்பாடு கள் செய்து கொண்டாடியதும் அவர் மீது சாதி ஆதிக்க சக்தி களுக்கு ஆத்திரமும், வன்மமும்  ஏற்பட காரணமாக இருந்துள் ளது; அத்தகைய சக்திகளின் அச்சுறுத்தலையும் மீறி அசோக் உறுதியுடன் செயல்பட்டு வந்துள் ளார்” என்று குறிப்பிட்டுள்ளனர். அசோக் படுகொலையை கண்டித்து கண்டனம் முழங்குமாறு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஊழியர்களை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.