tamilnadu

img

முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்க வேண்டாம்! - பெ.சண்முகம்

பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுபாடு என்பது வதந்தி என பிரதமர் மோடி கூறியதற்கு, முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்க முயற்சிக்க வேண்டாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"பெட்ரோல், டீசல், கேஸ் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள் என்று பிரதமர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
மிஸ்டர் மோடி அவர்களே! உண்மையை "வதந்தி" என்று கூறி நீங்கள் தான் மக்களை ஏமாற்றுகிறீர்கள். வந்து பாருங்கள்! பெட்ரோல் பங்குகளில் வரிசை கட்டி நிற்கும் வண்டிகளை!!
எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய முடியாமல் மக்கள் படும் அவஸ்தைகளை!
சிலிண்டர் கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான ஹோட்டல்கள் மூடப்பட்டு இருப்பதை! முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்க முயற்சிக்க வேண்டாம்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.