tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு... ஒரே நாளில் 62 பேர் பலி... 

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து கடந்த 5 நாட்களாக  3 ஆயிரத்துக்கும் மேல் புதிய பாதிப்பு ஏற்படுவதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். 

இந்நிலையில் இன்று மேலும் 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 86 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 62 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பதற்றத்துக்கு இடையே நற்செய்தியாக இன்று ஒரே நாளில் 2,212 பேர் குணமடைந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 749 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தமிழக கொரோனா பாதிப்பில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 92 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

அதிகபட்சமாக சென்னையில் 2167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு பௌத்த பாதிப்பு 55 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்து 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.