சென்னை
சனியன்று சுகாதாரத்துறை வெளியிட்ட கொரோனா பாதிப்பு அறிவிக்கையில் அதிகபட்சமாக சென்னையில் 1,329 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 93,537 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் அங்கு 20 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு 1,989 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்து மற்ற மாவட்டங்களில் மொத்த பாதிப்பு 5,659 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 453 பேரும், காஞ்சிபுரத்தில் 442 பேரும், திருவள்ளூரில் 385 பேரும், விருதுநகரில் 376 பேரும், தூத்துக்குடியில் 316 பேரும், மதுரையில் 301 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில்...
கோவை - 270
கன்னியாகுமரி - 269
ராணிப்பேட்டை - 243
தேனி - 229
வேலூர் - 212
நெல்லை - 210
திருச்சி - 199
தஞ்சாவூர் - 162
விழுப்புரம் - 153
திருவண்ணாமலை - 151
புதுக்கோட்டை - 110
சேலம் - 108
கள்ளக்குறிச்சி - 101
திருவாரூர் - 100
திண்டுக்கல், தென்காசி - 99
மற்ற மாவட்டங்களில் 90-க்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் (4) மாவட்டத்தில் மட்டும் இன்றைய பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கில் உள்ளது. அதிகளவு கிராம பகுதிகளை கொண்ட விருதுநகர் மாவட்டம் கொரோனாவால் விழிபிதுங்கி வருகிறது. அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த 166 பகுதிகளுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.