சென்னை:
தமிழகத்தில் 2 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் கே.செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று இருப் பது உறுதி செய்யப்பட்டுள் ளது. இதனையடுத்து ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி. கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது. இதனையடுதது அவர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் இவர்களுடன் சேர்த்து 15 சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் திருவல்லிக்கேணி தொகுதி உறுப்பினர் ஜெ. அன்பழகன் உயிரிழந்தார். அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செல்லுர் ராஜூ உள்ளிட்டோர் குணமடைந்துள்ளனர்.