சென்னை:
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி நிறைவடைந்தது. அதற்கு பிறகு இம்மாதம் 14 ஆம் தேதி சட்டப் பேரவையை மீண்டும் கூட்ட முடிவு செய்யப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.14 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3 வது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டப் பேரவை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சட்டப் பேரவையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ளதையொட்டி எம்.எல்.ஏக்களுக்கு வெள்ளியன்று (செப். 11) கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்தனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
செய்தியாளர்கள்
சட்டப்பேரவை கூட்டம் நடைபெறு வதையொட்டி அதில் பங்கேற்கும் ஊழியர்கள், பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது.