tamilnadu

1000 பேருக்கு கொரோனா...

மட்டுமே இயக்கப்படுகின்றன. இதில் எங்கிருந்து தனிமனித இடைவெளி கடைபிடிப்பது” என்கிறார் மற்றொரு தொழிலாளி.

30சதவீதம் பேருக்கு பாதிப்பு
“துப்புரவு பணிக்கு சென்று வட்ட அலு வலகத்திற்கு வரும் தொழிலாளர்கள் கைகழுவ கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். ஏப்ரல் 20 அன்று முதன்முறையாக மாநகராட்சி ஊழியர் ஒருவருக்கு தொற்று இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. ஜூன் 17 வரை நிரந்தர துப்புரவு தொழிலாளர்களில் 380 பேருக்கும்,ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் களப்பணி யாளர்களில் 700 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மாநகராட்சியின் மொத்த ஊழியர்களில் 30 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனை முறையாக மாநகராட்சி அறிவிக்காமல் உள்ளது. மாறாக, மாநகராட்சி ஊழியர்களுக்கு நேரடியாக எந்த அரசு, மாநகராட்சி மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனை செய்யக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது” என்று அதிர்ச்சிகரமான தகவலை சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.சீனிவாசுலுதெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் முன்கள வீரர்களாக பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டால் உடனடியாக 2 லட்சம் ரூபாய் இழப்பீடும், உயிரிழந்தால் 50 லட்சம் ரூபாய் நிவாரணமும், வீட்டில்ஒருவருக்கு தகுதியான பணியும் வழங்கப்படும் என்று அரசாணை 180 வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தொற்று ஏற்பட்டால் அதனை பதிய மறுக்கிறார்கள். இதனைக்கண்டித்து மே 12 அன்று தமிழகம் முழுவதும் உள்ளாட்சி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதன்பிறகு சென்னையில் அலுவலர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் என 35 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கூட 2 லட்சம் ரூபாய் தரவில்லை. மேலும் அரசாணை ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பொருந்தாது என்று கூறுகின்ற னர். இது களப்பணியாற்றும் ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மே 9 அன்று என்யுஎல்எம் ஒப்பந்த தொழிலாளி நந்தகுமாரும், மே 14 அன்று நிரந்தர துப்புரவு தொழிலாளி அரியநாயகியும், ஜூன் 10 அன்று மின்பணியாளர் திலக்குமாரும், ஜூன் 11 அன்று நிரந்தர தொழிலாளி சங்கரும், ஜூன் 20 அன்றுதேவராஜ் என அடுத்தடுத்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவருக்கு கூட 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவில்லை.தமிழகத்தில் இதுவரை விஏஓ, காவல் உதவி ஆய்வாளர் என 2 பேருக்கு மட்டுமே 50 லட்சம் ரூபாய் நிவாரணத்தை வழங்கியுள்ளனர்” என்றும் சீனிவாசுலு தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில், “2 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகைக்கு ஈடாக தொற்று பாதிக்கப்பட்ட தொழிலாளி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று ஜூன் 24ந் தேதி முதலமைச்சர் அறிவித்தார். அந்த அறிவிப்பும் அமலாகவில்லை” என்றார்.

ஊதியம் பறிப்பு
“துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக 379 ரூபாயும், ராம்கே தொழிலாளர்களுக்கு 210 ரூபாயும் வழங்கப்படுகிறது. அரசாணை 62ன் படி (2017 அக் 11) தேதியிலிருந்து குறைந்தபட்ச ஊதியத்தை 624 ரூபாயாகஉயர்த்தி இருக்க வேண்டும். இதன்படி மாதம் 16ஆயிரத்து 725 ரூபாய் தொழிலாளர்களுக்கு கிடைத்திருக்கும். மாறாக, 11 ஆயிரத்து 370 ரூபாய்தான் வழங்கப்படுகிறது. அதாவது மாதம்5 ஆயிரத்து 355 ரூபாயை ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் அரசு பறிக்கிறது. தொழி லாளர்களுக்கு ஊதியத்தை கொடுக்காமல் விளக்கேற்றுவதாலும், கைதட்டுவதாலும் என்ன பயன்?” என்று சீனிவாசுலு ஆவேசத்தோடு கேள்வி எழுப்புகிறார்.

கொரோனா தடுப்பு பணிக்காக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. காலம்காலமாக பணியாற்றும் தொழிலாளர் களுக்கு 11,370 ரூபாயும், தற்காலிக தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்குவது நியாயமா என்று தொழிலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கூடுதலாக ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என்றும், துப்புரவு, சுகாதார (மலேரியா) பணியாளர்களுக்கு 2500 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. இவற்றில் எதையுமே வழங்காமல் உள்ளனர். அதேசமயம் அகவிலைப்படி ரத்து, ஊதிய உயர்வு ரத்து,  ஈட்டிவிடுப்பு ஒப்படைப்பு ரத்து, ஓய்வூதிய வட்டிவிகிதம் குறைப்பு, ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு என தொழிலாளர் களுக்கு எதிரான உத்தரவுகள் மட்டும் உடனுக்குடன் அமலாக்கப்படுகிறது.

ஒருவருடமாக கொள்முதல் இல்லை
துடைப்பம், அன்னகூடை, ஓடு போன்ற பணி உபகரணங்களை கூட ஒரு வருடமாக கொள்முதல் செய்யாமல் உள்ளனர். பழைய பொருட்களை வைத்துக் கொண்டு கடுமையாக உழைக்கும் ஊழியர்களுக்கு அள்ளித்தாராவிட்டாலும், அறிவித்ததையாவது உரிய காலத்தில் தர வேண்டாமா? எனவும் தொழி லாளர்கள் கேட்கின்றனர்.“தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர்கள், மண்டல அதிகாரிகள் என பலரையும் சந்தித்து முறையிடுவதாகவும், அதிகாரிகள் தரும் வாக்குறுதிகள் களத்தில் அமலாவதில்லை” என்று கூறும் சீனிவாசுலு, “களப்பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தினசரி பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும், வட்ட அலுவலகங்களில் கைகழுவ தண்ணீர், சோப்பு அல்லதுசானிடைசர் ஏற்பாடு செய்ய வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

தொற்றால் பாதிக்கப்படும் ஒப்பந்த தொழிலாளர் உள்ளிட்ட களப்பணியாளர்கள் அனை வருக்கும் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்த 9 தொழிலாளர்களுக்கும் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் 50 லட்சம் ரூபாய் நிவாரணத்தை விரைந்து தர வேண்டும். அரசு அறிவித்த சிறப்பு ஊதியங்கள் அனைத்தையும் காலம்கடத்தாமல் வழங்க வேண்டும்” என்கிறார்.சென்னையில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரை பணயம்வைத்து களப்பணியாற்றும் துப்புரவு தொழி லாளர்களை அரசு கண்டுகொள்ளுமா? இவர்கள்பாராட்டுகிறார்கள், அவர்கள் பாராட்டு கிறார்கள்என்று ஆட்சியாளர்கள் மாய்மாலம் காட்டாமல் ஊழியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்ள வேண்டாமா?தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி களில் இதேபோன்ற பிரச்சனைகள் உள்ளன.எனவே, தமிழகம் தழுவிய போராட்டத்திற்கு உள்ளாட்சி ஊழியர்கள் தயாராகி வருகின்றனர். அரசு அறிவித்ததை செயல்படுத்துமா? ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமா? கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முழுமூச்சோடு செயல்படுமா?

கொரோனா மாளிகை?
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடத்தின் பின்புறம் அம்மா மாளிகை உள்ளது. 5 தளங்களை கொண்ட அந்த மாளிகையில் ஒரு தளத்தில் 4 துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. குறிப்பாக இ-பாஸ் வழங்கிய துறையில் மட்டும் 15 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் கொரோனா தொற்று பரவி உள்ளது. அம்மா மாளிகை கொரோனா மாளிகையாக மாறியுள்ளது. மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி, உதவி மக்கள் தொடர்பு அதிகாரி என பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆலந்தூர் மண்டலத்தில் மண்டல அதிகாரி, உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் என 10க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்டலம்-5, வட்டம் 58ல் பணியாற்றும் 60 களப்பணியாளர்களில் 22 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இத்தகைய கடுமையான சூழலிலும் ஊழியர்களும், துப்புரவு, களப்பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கூட வழங்காமல் உள்ளனர். முதலமைச்சர் அறிவித்த பணப்பயன்களும் அவர்களை சென்றடையவில்லை.