சென்னை:
கொரோனா வைரஸ் நோய் தமிழ்நாடு பொது சுகாதார சட்டப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வைரஸ் நோயால் தாக்கப்படுவோருக்கு உரிய நிவாரணங்கள் அளிக்கவழிவகை ஏற்படும்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை சட்டம் 1939-இன் 62-ஆவதுபிரிவில் கொரோனா வைரஸ் தாக்குதலானது நோயாகக் குறிப்பிடப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அளித்துள்ளதாக தனது உத்தரவில் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு தமிழக அரசிதழில் சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.