tamilnadu

திருநங்கைகளுக்கு கொரோனா உதவி: அரசாணை வெளியீடு....

சென்னை:
மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண உதவித் தொகை 2 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணை பிறப் பிக்கப்பட்டுள்ளது.

அதில், "கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவி தொகையாக ரூ.4000  வழங்க முடிவு செய்து முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் குடும்ப அட்டை வைத்திருந்த 2956 திருநங்கைகளுக்கும் வழங் கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.இந்நிலையில், குடும்ப அட்டை இல்லாத தங்களுக்கும் வழங்க வேண்டும் என திருநங்கைகள் தரப்பில் நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் ,விடுபட்ட திருநங்கைகளுக்கும் நிதி உதவி வழங்க தமிழக அரசுக்கு நீதிமன் றம் உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து ஏற்கனவே குடும்ப அட்டை உள்ள திருநங் கைகள் 2956 பேருக்கு நிதி வழங்கியது போக எஞ்சிய 8493 திருநங்கைகளுக்கும் நிதி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.8493 திருநங்கைகளுக்கு தலா ரூ. 2000 வழங்க 1 கோடியே 69 லட்சத்து 86 ஆயிரம் நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள் ளது" எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.