சென்னை, டிச. 6 - டாக்டர் அம்பேத்கர் 68- ஆவது நினைவு தினமான வெள்ளியன்று (டிச.6) சென்னை சைதாப்பேட்டை எம்.சி. ராஜா விடுதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
நவீன இந்தியாவின் சிற்பி அம்பேத்கர் என்று இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிதாமகர் இ.எம்.எஸ். நம்பூ திரிபாட் கூறினார். சாதி, தீண் டாமையை ஒழிக்க தனது வாழ்நாளை அம்பேத்கர் அர்ப்பணித்தார். சாதி பேத மற்ற சமூகத்தை உருவாக்க முயற்சித்தார். சிறந்த ஒரு அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கினார்.
ஒரு மனிதன்: ஒரு மதிப்பு உள்ளதா?
நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டம் நீடித்திருக்கும், தீய வர்கள் வந்தால் நிலைத்திரு க்காது. ஒருவருக்கு ஒரு ஓட்டு. ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு என்ற அரசியல் சுத ந்திரத்தை நாம் பெற்றுள் ளோம். ஆனால், ஒரு மனிதன் ஒரு மதிப்பு என்ற நிலை இல்லை என்று அம்பேத்கர் அரசமைப்பு அவையில் பேசினார். அதாவது, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என்றார்.
மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சுயச்சார்பு, ஜன நாயகம் ஆகிய விழுமியங் களை உள்ளடக்கிய அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத் திற்கு ஆபத்து ஏற்பட்டுள் ளது. எனவே, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது, சமூக பொருளாதார சம த்துவத்தை உருவாக்குவது ஆகியவற்றிற்கு உறுதி யேற்கும் நாளாக அம்பேத் கர் நினைவு நாளைக் கடைப் பிடிப்போம்.
இவ்வாறு ஜி. ராம கிருஷ்ணன் கூறினார்.நிகழ் வின் போது கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலா ளர் ஆர். வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ம. சித்ரகலா, எஸ். குமார், பா. பாலகிருஷ்ணன், சைதாப் பேட்டை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேசன் உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.