திருவண்ணாமலை, ஜன. 13- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்ட மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகளுக்கும், வாக்காளர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் வந்தவாசியில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து தலைமை தாங்கினார், மாநிலக்குழு உறுப்பினர் கே.விஜயா வரவேற்றார். உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பெரணமல்லூர் ஒன்றியம் எறும்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மஞ்சுளா, தெள்ளார் ஒன்றியம், மழுவங்கரணை ஊராட்சி மன்றத்ஜ் தலைவர் பதவிக்கு விஜயா நடராஜன், வந்தவாசி ஒன்றியம் மங்கநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ராஜாராம், செய்யார் ஒன்றியம் வடகம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வெங்கடேசன், இருமரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மணி, காளசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வள்ளியம்மாள், ஆரணி ஒன்றியம் முருகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வாசுகி, மேலும் சித்தாமூர் அனிதா, புலிவாய் கருப்பாயி, காவணியாத்தூர் ஏழுமலை, மாவலவாடி ஏழுமலை, ஆலியூர் குணசேகரன் ஆகியோருக்கும், வாக்காளர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பாராட்டு விழா பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான, டிகே.ரங்கராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் ப.செல்வன், ஜா.வே.சிவராமன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் சுயேச்சையாகவும், நேர்மையாகவும் மக்கள் பணியாற்ற மார்க்சிஸ்ட் கட்சியும், மலைவாழ் மக்கள் சங்கமும் என்றும் துணை நிற்கும் என தலைவர்கள் பாராட்டு உரையில் தெரிவித்துள்ளனர்.